Sony நிறுவனத்தின் புதிய E Ink tablet அறிமுகம்

Sony நிறுவனத்தின் புதிய E Ink tablet அறிமுகம்

மற்ற அனைத்து நிறுவனங்களின் தயாரிப்புகளை மிஞ்சும் வகையில் பிரபல சோனி(Sony) நிறுவனம் புதிய டேப்லெட்டினை(Tablet) அறிமுகப்படுத்தியுள்ளது.

Sony DPT-RP1 E Ink tablet -ஆனது 1650x2220 pixels என்ற அளவில் 13.3இன்ச் திரையினை கொண்டுள்ளது. Quad-core Marvell IAP140 என்னும் 64bit processor இந்த Tablet -ல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், 16GB அளவிலான மெமரியினை கொண்டது. இந்த Tablet-ல் 10,000க்கும் மேற்பட்ட பைல்களை சேகரித்து வைத்து கொள்ள இயலும்.

மிக மெல்லிய அமைப்பை கொண்ட இந்த tablet ஆனது 30 பக்கங்களை கொண்ட புத்தகத்தின் தடிமனையே பெற்றுள்ளது. இதன் எடை 349கிராம்கள் மற்றும் அளவு 302.6x224x5.9மி.மீ.

Wi-Fi, Blue Tooth இணைக்கும் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த Tablet மூலமாக இணைய தளப்பக்கங்களை PDF பைல்களாக மாற்றி கொள்ள இயலும்.

Wi-Fi, Blue Tooth வசதி உள்ளதால் மற்றவருடன் பைல்களை பரிமாறி கொள்வதும் எளிது.

 

 

இந்த Tablet உடன் தரப்பட்டுள்ள பேனாவினை பயன்படுத்தி புத்தகத்தில் நாம் குறிப்பு எடுப்பதை போன்று எடுத்து கொள்ள இயலும்.

இதில் உள்ள பேட்டரி சார்ஜ் ஏறுவதற்கு ஐந்தரை மணி நேரம் ஆகும். ஒரு முறை சார்ஜ் ஏற்றினால் ஒரு மாதம் வரையிலும் Tablet-ஐ பயன்படுத்தும் வகையில் திறன் வாய்ந்தது.

இத்தகைய சிறப்புகளை வாய்ந்த Tablet-ன் விலை 700 டொலராக நிர்ணயிக்கப்பட்டு இந்த வருடம் ஜீன் -5ல் ஜப்பானில் அறிமுகப்படுத்தவுள்ளது, மற்ற நாடுகளிலும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.