ஹார்லி டேவிட்சன் இரண்டு மாடல்களின் விலை குறைப்பு

ஹார்லி டேவிட்சன் இரண்டு மாடல்களின் விலை குறைப்பு

ஹார்லி டேவிட்சன் இந்தியா ஃபேட் பாய் மற்றும் ஹெரிடேஜ் சாஃப்டெயில் கிளாசிக் என இரண்டு மாடல்களின் விலையை குறைத்துள்ளது. அதன்படி ஏற்கனவே ரூ.17.01 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்ட ஃபேட் பாய் இனி ரூ.14.99 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படும் என்றும் ரூ.18.50 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்ட ஹெரிடேஜ் சாப்டெயில் கிளாசிக் இனி ரூ.15.99 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.

புதிதாய் மாற்றப்பட்ட விலை 2017 சாஃப்டெயில் மாடல்களுக்கு வழங்கப்படும் என்றும் புதிய விலை குறைப்பு செப்டம்பர் 1, 2017 முதல் அமலாகும் நிலையில், ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே இந்த சலுகை வழங்கப்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2018 சாஃப்ட்டெயில் மாடலில் அதிகப்படியான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

அதன்படி 2018 சாஃப்ட்டெயில் மாடலின் முன்பக்கம் டூயல் டிஸ்க் பிரேக், ஹார்லி டேவிட்சனின் அதிக சக்திவாய்ந்த மற்றும் கூலர்-ரன்னிங் Milwaukee-Eight 107 இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக இருக்கும் சாஃப்டெயில் மேம்படுத்தப்பட்ட செயல்திறன் கொண்டுள்ளது.

\"\"

சமீபத்தில் பீட்டர் மெக்கென்சி ஹார்லி டேவிட்சன் இந்தியாவின் நிர்வாக தலைவராக நியமிக்கப்பட்டார். 2018 சாஃப்டெயில் மாடல் முற்றிலும் மாற்றப்பட்டு, புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், முந்தைய மாடலை வாங்குவது வாடிக்கையாளர்களுக்கு நல்ல தேர்வாக அமையாது என்றே கூற வேண்டும்.

இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் ஆகஸ்டு 2009-ம் ஆண்டு பணிகள் துவங்கப்பட்டு ஜூலை 2010 முதல் விற்பனை துவங்கியது. தமிழ் நாடு, கர்நாடகா, கேரளா, டெல்லி, ஹரியானா, சண்டிகர், தெலுங்கானா, பஞ்சாப், மேற்கு வங்கம், குஜராத், கோவா, அசாம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்திர பிரதேசம் மற்றும் உத்தர்கண்ட் உள்ளிட்ட இடங்களில் விற்பனை மையங்களை கொண்டுள்ளது.

 

 
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.