விரைவில் அறிமுகமாகும் ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ

விரைவில் அறிமுகமாகும் ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ

ஸ்கோடா நிறுவனத்தின் புதிய செடான் விரைவில் இந்தியாவில் வெளியிடப்படும் என ஸ்கோடா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2016 நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட ரேபிட் மான்ட் கார்லோ மாடலின் மேம்படுத்தப்பட்ட மாடல் தான் இம்முறை அறிமுகம் செய்யப்பட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.   
 
புதிய ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ மாடலின் முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் ரூ.50,000 செலுத்து புதிய ரேபிட் மான்ட் கார்லோவினை முன்பதிவு செய்ய முடியும். 
 
ரேபிட் மான்ட் கார்லோ புதிய மாடலின் வெளிப்புறங்களில் பிரத்தியேக சிவப்பு நிறம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மேட் பிளாக் கிரில், ஷைனி பிளாக் ரூஃப், ORVM கவர்கள் மற்றும் பூட்-மவுண்ட்டெட் ஸ்பாய்லர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 16-இன்ச் டூயல்-ஸ்போக் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளதால் புதிய மாடல் பார்க்க ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா போன்றே காட்சியளிக்கிறது.
 
\"\"
 
அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஸ்கோடா புதிய கார் வாடிககையாளர்களுக்கு செப்டம்பர் மாத முதல் விநியோகம் செய்யப்படும். ரேபிட் மான்ட் கார்லோ மாடலில் 1.5 லிட்டர், 4-சிலிண்டர் டர்போ டீசல் 110PS/250Nm மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் மோட்டார் 105PS/153Nm செயல்திறன் கொண்டுள்ளது. 
 
இரண்டு மாடல்களிலும் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. தற்சமயம் ரேபிட் ஸ்டைல் மாடல் விலை ரூ.10.24 லட்சத்தில் இருந்து துவங்கி பெட்ரோல் மேனுவல் மாடல் ரூ.13.06 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 
 
புதிய ஸ்கோடா மான்ட் கார்லோ எடிஷன் விலை ஸ்டைல் மற்றும் பிரீமியம் மாடல்களுக்கு ஏற்ப ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.