ரோல்ஸ் ராய்ஸ் கலினன்

ரோல்ஸ் ராய்ஸ் கலினன்

சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரோல்ஸ் ராய்ஸ் கலினன் ஜெர்மனியில் டெஸ்டிங் செய்யப்படும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய மற்றும் அதிக ஆடம்பர மாடல் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  
 
ஏற்கனவே வெளியான ஸ்பை படங்களுடன் ஒப்பிடும் போது தற்சமயம் வெளியாகியுள்ள ப்ரோட்டோடைப் மாடலில் அதிகப்படியான மாற்றங்கள் செய்யப்படவில்லை. எனினும் முன்பக்கம் சிறிதளவு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  
 
\"\"
 
புதிய கலினன் புதிய ஃபான்டம் மாடலை சார்ந்து உருவாக்கப்படுகிறது. முழுக்க முழுக்க அலுமினியம் கொண்டு உருவாக்கப்படுவதால் இதன் எடையில் அதிகப்படியான கவனம் செலுத்தப்பட வேண்டும். மேலும் புதிய மாடல்  மாற்றியமைக்கப்பட்ட ரால்ஸ் ராய்ஸ் V12 யுனிட் போன்று இருக்கும் என கூறப்படுகிறது. 
 
ரால்ஸ் ராய்ஸ் கலினன் மாடல் எஸ்.யு.வி. மட்டுமின்றி மகிப்பெரிய காராக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ரால்ஸ் ராய்ஸ் கலினன் விரைவில் நடைபெற இருக்கும் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டு அடுத்த ஆண்டு வாக்கில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.