ராயல் என்ஃபீல்டு 750 சிசி: விரைவில் வெளியாகும் என தகவல்

ராயல் என்ஃபீல்டு 750 சிசி: விரைவில் வெளியாகும் என தகவல்

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 750சிசி மோட்டார்சைக்கிள் ஸ்பை படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் 750சிசி பல்வேறு மாடல்களில் வெளியாகும் என்றும் இதன் பேரலல்-ட்வின் சிலிண்டர் இன்ஜின் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
 
தற்சமயம் வெளியாகியுள்ள புகைப்படங்களில் பழைய சேசிஸ் கொண்ட ஸ்டான்டர்டு மோட்டார்சைக்கிளான கஃபே ரேசர் மற்றும் 750 சிசி இன்ஜின் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
கஃபே ரேசர் 750 மற்றும் ஸ்டான்டர்டு 750 மாடல்களில் உள்ள வித்தியாசம் ஃபியூயல் டேங்க் மற்றும் சீட் அமைப்புகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டான்டர்டு மாடலில் ஆர்.இ. கிளாசிக் மாடல்களை போன்றே காட்சியளிக்கிறது. கஃபே ரேசர் மாடலில் வழக்கமான ஸ்கல்ப்டெட் ஒற்றை சீட் வழங்கப்பட்டுள்ளது. 
 
\"\"
 
மேலும் புதிய ஸ்டான்டர்டு மாடலில் வழக்கமான ஹேன்டில்பார் மற்றும் கஃபே ரேசர் மாடலில் க்ளிப்-ஆன் வகை ஹேன்டிள்பார்களை வழங்குகிறது. கால் வைக்கும் உபகரணங்களும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு கூடுதல் சவுகரியத்தை வழங்கும் படி புதிய வடிவமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே வெளியான புகைப்படங்களில் கஃபே ரேசர் 750 சிசி மாடலில் பைரெளி ஸ்போர்ட் டெமான் டையர்கள் வழங்கப்பட்டுள்ளது. ஸ்டான்டர்டு மாடலில் பைரெளி ஃபேண்டம் ஸ்போர்ட்ஸ்காம்ப் ரப்பர் டையர் கொண்டுள்ளது. இது தவிர இரண்டு மாடல்களிலும் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
 
புதிய ராயல் என்ஃபீல்டு 750 சிசி பைக் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் EICMA விழாவில் அறிமுகம் செய்யப்பட்டு இந்தியாவில் 2018-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.