யமஹா டார்க் நைட் வேரியன்ட்: விரைவில் வெளியிட திட்டம்

யமஹா டார்க் நைட் வேரியன்ட்: விரைவில் வெளியிட திட்டம்

யமஹா மோட்டார் லிமிட்டெட் நிறுவனம் இந்தியாவில் தற்சமயம் விற்பனை செய்து வரும் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களின் டார்க் நைட் (Dark Night) வேரியன்ட் மாடலை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. 
 
புதிய டார்க் நைட் வேரியன்ட் யமஹா FZ-S FI, சலுட்டோ RX மற்றும் சிக்னஸ் ரே ZR டிஸ்க் பிரேக் மாடல்களில் வெளியிடப்படுகிறது. க்ரோம் வடிவமைப்பில் மேட் பிளாக் ஃபினிஷ் ஒட்டுமொத்தமாக அழகை சேர்க்கும். பண்டிகை காலத்தில் விற்பனையை அதிகரிக்க புதிய டார்க் நைட் மாடல்கள் உதவியாக இருக்கும்.
 
\"\"
 
யமஹா FZ-S FI டார்க் நைட் எடிஷன் 149சிசி ஏர்-கூல்டு, ஃபியூயல் இன்ஜெக்டெட் இன்ஜின் - 13bhp, 12.8Nm டார்கியூ செயல்திறன் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. இதேபோல் சலுட்டோ RX டார்க் நைட் மாடல் 110சிசி ஏர்-கூல்டு இன்ஜின் 7.37 bhp, 8.5Nm பீக் டார்கியூ மற்றும் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. யமஹா சிக்னஸ் ரே ZR டார்க் நைட் (டிஸ்க் பிரேக்) மாடல் 113சிசி ஏர்-கூல்டு இன்ஜின் 7.10 bhp, 8.1Nm பீக் டார்கியூ மற்றும் V-பெல்ட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
 
புதிய டார்க் நைட் மாடல்களின் வெளிப்புற நிறம் மற்றும் கூடுதல் உபகரணங்கள் மட்டும் சேர்க்கப்படும் நிலையில், இதன் இன்ஜின் மற்றும் செயல்திறன் போன்ற அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் யமஹா புதிய பதிப்பினை அறிவித்துள்ளது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.