யமஹா ஃபேஸர் 25 இந்தியாவில் வெளியானது

யமஹா ஃபேஸர் 25 இந்தியாவில் வெளியானது

யமஹா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஃபேஸர் 25 இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஃபேஸர் 25 விலை ரூ.1.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
 
புதிய ஃபேஸர் 25 ஏற்கனவே இந்தியாவில் விற்பனையாகி வரும் FZ25 மாடலின் ஃபேரிங் வெர்ஷன் ஆகும். இந்தியாவில் புதிய ஃபேஸர் 25 பஜாஜ் பல்சர் 200 NS மற்றும் டியூக் 250 மாடல்களுக்கு போட்டியாக அமையும். ஃபேரிங் மட்டுமின்றி ஃபேஸர் 25 எடை FZ25 மாடலை விட ஆறு கிலோகிராம் அதிகமாக இருக்கிறது. 
 
டூயல் ஹார்ன் மற்றும் DRL கொண்ட பைலட் லேம்ப் மற்றும் இருக்கைகளில் அதிகளவு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் சில அம்சங்கள் வழங்கப்படவில்லை என்றாலும், புதிய ஃபேஸர் 25 லிட்டருக்கு 43 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என யமஹா தெரிவித்துள்ளது. 
 
\"\"
 
யமஹாவின் புதிய ஸ்போர்ட்ஸ் டூரர் மாடல் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யமஹா ஏற்கனவே அறிமுகம் செய்த FZ25 மாடலை விட ரூ.10,000 அதிகமான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள ஃபேஸர் 25 முன்பதிவு துவங்கியுள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு வாகனம் ஆறு முதல் பத்து நாட்களில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
யமஹா ஃபேஸர் 25 மாடலில் 20.9Ps மற்றும் 20Nm செயல்திறன் கொண்டுள்ளது. 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ள யமஹா ஃபேஸர் 25 லிட்டருக்கு 43 கிலோமீட்டர் செல்லும். 14 லிட்டர் பெட்ரோல் டேன்க் கொண்டுள்ள ஃபேஸர் 25 ஒருமுறை டேன்க் முழுக்க பெட்ரோல் போட்டு 600 கிலோமீட்டர் செல்ல முடியும் என யமஹா தெரிவித்துள்ளது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.