மோட்டோ ஜி5S பிளஸ், மோட்டோ ஜி5S ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

மோட்டோ ஜி5S பிளஸ், மோட்டோ ஜி5S ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

மோட்டோரோலா மோட்டோ ஜி5S மற்றும் மோட்டோ ஜி5S பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் நேற்று (ஆகஸ்டு 29) நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்கள் ஆஃப்லைன் விற்பனை மையங்கள் மற்றும் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. 
 
மோட்டோ ஜி5S பிளஸ் ஸ்மார்ட்போனில் இரண்டு 13 எம்பி பிரைமரி கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. மோட்டோ ஜி5S ஸ்மார்ட்போனில் ஒற்றை 16 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இரண்டு மோட்டோ ஜி5S ஸ்மார்ட்போன்களின் ஹோம் பட்டனில் கைரேகை ஸ்கேனர், மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை வழங்க டர்போ பவர் சார்ஜர்கள் வழங்கப்பட்டுள்ளது. 
 
\"\"
 
மோட்டோ ஜி5S சிறப்பம்சங்கள்:
 
- 5.2 இன்ச் 1920x1080 பிக்சல் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே
- 1.4 ஜிகாஹெர்டஸ் ஆக்டா-கோர் 64-பிட் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
- அட்ரினோ 505 GPU
- 4 ஜிபி ரேம்
- 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட்
- டூயல் சிம் ஸ்லாட்
- 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்இடி பிளாஷ்
- f/2.0 அப்ரேச்சர், 1080 பிக்சல் வீடியோ பதிவு செய்யும் வசதி
- 5 எம்பி செல்ஃபி கேமரா, பிளாஷ், f/2.0 அப்ரேச்சர்
- வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி
- கைரேகை ஸ்கேனர்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3000 எம்ஏெச் பேட்டரி, டர்போ சார்ஜிங்
 
இந்தியாவில் மோட்டோ ஜி5S லூனார் கிரே மற்றும் ஃபைன் கோல்டு நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் மோட்டோ ஜி5S ஆஃப்லைன் முறையிலும் விற்பனை செய்யப்படுகிறது.  
 
\"\"
 
மோட்டோ ஜி5S பிளஸ் சிறப்பம்சங்கள்:
 
- 5.5 இன்ச் 1920x1080 பிக்சல் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே
- 2.0 ஜிகாஹெர்டஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர்
-அட்ரினோ 506 GPU
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட்
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்பி + 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்இடி பிளாஷ்
- f/2.0 அப்ரேச்சர், 4K வீடியோ பதிவு செய்யும் வசதி
- 8 எம்பி செல்ஃபி கேமரா, பிளாஷ், f/2.0 அப்ரேச்சர்
- வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி
- கைரேகை ஸ்கேனர்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3000 எம்ஏெச் பேட்டரி, டர்போ சார்ஜிங்
 
மோட்டோ ஜி5S பிளஸ் ஸ்மார்ட்போன் லூனார் கிரே மற்றும் பிளஷ் கோல்டு நிறங்களில் கிடைப்பதோடு, இந்தியாவில் ரூ.15,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் மோட்டோ ஜி5S பிளஸ் ஆஃப்லைன் முறையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.