மின்சக்தியில் செல்லும் டெஸ்லா மாடல் 3 அறிமுகம்

மின்சக்தியில் செல்லும் டெஸ்லா மாடல் 3 அறிமுகம்

டெஸ்லா நிறுவனத்தின் புதிய மாடல் 3 கார் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அறிமுகமாகியுள்ள மாடல் 3 ஏற்கனவே பல லட்சம் முன்பதிவுகளை கடந்து விட்டது. முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும் கார் முதற்கட்டமாக அமெரிக்காவில் விற்பனை செய்யப்படுகிறது. 
 
டெஸ்லா நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பங்கேற்ற மாடல் 3 வெளியீட்டு விழாவில் ஏற்கனவே முன்பதிவு செய்த முப்பது வாடிக்கையாளர்களுக்கு டெஸ்லா மாடல் 3 விநியோகம் செய்யப்பட்டது. முதல் முப்பது கார்களையும் எலான் மஸ்க் வழங்கினார்.  
 
புதிய மாடல் 3 பேஸ் பதிப்பு விலை 35,000 டாலர்கல் அதாவது இந்திய மதிப்பில் ரூ.22.45 லட்சத்தில் துவங்குகிறது. மணிக்கு 0-96 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5.6 நொடிகளில் பிடிக்கும் மாடல் 3 அதிகபட்சம் மணிக்கு 209 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
மாடல் 3 முப்பது நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 209 கிலோமீட்டர்கள் வீதம் ஒருமணி நேரம் சார்ஜ் செய்தால் 48 கிலோமீட்டர் செல்லும் திறன் கொண்டுள்ளது. மாடல் 3 உள்புறத்தில் 15-இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல், வைபை, கீலெஸ் என்ட்ரி, வாய்ஸ் ஆக்டிவேட்டெட் கண்ட்ரோல், ப்ளூடூத், 60/40 ஸ்ப்லிட் ஃபோல்டிங் பின்புற இருக்கைகள், பேக்கப் கேமரா, பவர் மிரர், ஒன்-டச் எலெக்ட்ரிக் விண்டோக்கள் வழங்கப்பட்டுள்ளது.  
 
கார் முழுக்க எட்டு கேமராக்களும், 12 அல்ட்ராசோனிக் சென்சார், முன்பக்கம் ஆறு ஏர்-பேக்ஸ் மற்றும் பக்கவாட்டில் இரண்டு ஏர்-பேக்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் ஸ்டேபிலிட்டி மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல், பிரெஷர் மானிட்டர் வழங்கப்பட்டுள்ளது. மாடல் 3 சக்தியூட்டப்படும் பேட்டரி எட்டு ஆண்டுகள் அதிகபட்சம் 160,000 கிலோமீட்டர் வாரண்டி மற்றும் கார் நான்கு ஆண்டுகள் வாரண்டி வழங்கப்படுகிறது. 
இதன் அடுத்த பதிப்பு \'லாங் ரேன்ஜ்\' (Long Range) என அழைக்கப்படுகிறது. 44,000 டாலர்கள் விலையில் கிடைக்கும் இந்த மாடலில் இருக்கும் பேட்டரில 499 கிலோமீட்டர் செல்லும் திறன் கொணடுள்ளது. இந்த பேட்டரி மணிக்கு 0-96
கிலோமீட்டர் வேகத்தை 5.1 நொடிகளில் செல்லும் திறன் மற்றும் மணிக்கு அதிகபட்சம் 225 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். 30 நிமிடம் சார்ஜ் செய்தால் 274 கிலோமீட்டர்களும், ஒரு மணி நேரம் சார்ஜ் செய்தால் 60 கிலோ மீட்டர் பயணிக்கலாம். 
 
இதுமட்டுமின்றி வாடிக்கயாளர்களுக்கு பல்வேறு இதர வசதிகளை வழங்கும் பதிப்புகளும் மாடல் 3 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.