புத்தம் புதிய ஆடி A8: ஸ்பை படங்கள்

புத்தம் புதிய ஆடி A8: ஸ்பை படங்கள்

ஆடி நிறுவனம் பி.எம்.டபுள்.யூ. நிறுவனத்தின் 7 சீரிஸ் மாடலுக்கு போட்டியாக புதிய A8 மாடல் காரினை அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து மெர்சிடிஸ் S கிளாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலையும் வெளியிட்டது. இரண்டு மாடல்களும் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், முதல் முறையாக இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளயாகியுள்ளது.   

புதிய ஆடி A8 பெட்ரோல், டீசல் மற்றும் ஹைப்ரிட் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. டீசல் மாடலில் 3.0 லிட்டர் V6 யுனிட் 282 Bhp, பெட்ரோல் மாடலில் 3.0 லிட்டச் V6 யுனிட் 335 Bhp செயல்திறன் கொண்டுள்ளது. இத்துடன் 4.0 விட்டர் V8 டீசல் Bhp மற்றும் 6.0 லிட்டர் W12 கொண்டுள்ளது. 

இதில் 3.0 மற்றும் 4.0 லிட்டர் டீசல் மற்றும் 3.0 பெட்ரோல் மாடல் இந்தியாவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஹைப்ரிட் மாடலுக்கு சலுகை வழங்கப்படலாம் என கூறப்படும் நிலையில், இந்த மாடல் இந்தியாவில் வெளியாகாது என்றே கூறப்படுகிறது.  

\"\"

புதிய மாடலில் எச்டி மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லேம்ப், லேசர் தொழில்நுட்பம் மற்றும் புதிய OLED டெயில் லேம்ப் கிளஸ்டர் கொண்டுள்ளது. இத்துடன் புத்தம் புதிய டேஷ்போர்டு மற்றும் 10.1 இன்ச் டச்ஸ்கிரீன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஆடி A8 சீட் மசாஜ் மற்றும் ஃபூட் மசாஜ் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

இதுதவிர பைலட் டிரைவிங் அம்சமும் வழங்கப்படுகிறது, எனினும் இந்த அம்சம் இந்தியாவில் வழங்கப்படுவது உறுதியாகவில்லை. மணிக்கு 60 கிலோமீட்டர் வரை தானாக செல்லும் திறன் கொண்டிருப்பதால் இந்த வசதி தற்சமயம் இந்தியாவில் வழங்கப்படாது என்றே கூறப்படுகிறது. 

இந்தியாவில் ஆட்டோ பார்க் அசிஸ்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த அம்சம் கொண்டு ஓட்டுநர் உதவியின்றி வாகனம் தானாக பார்க் செய்து கொள்ளும். இத்துடன் இந்த காரில் முழுமையாக அட்ஜெஸ்ட் செய்யக் கூடிய சஸ்பென்ஷன் வழங்கப்படும் என கூறுப்படுகிறது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.