புதுவரவு: மாருதி சுசுகி ஸ்விஃப்ட் ஹைப்ரிட் சீரிஸ்

புதுவரவு: மாருதி சுசுகி ஸ்விஃப்ட் ஹைப்ரிட் சீரிஸ்

மாருதி சுசுகி நிறுவனத்தின் புத்தம் புதிய ஸ்விஃப்ட் மாடல்களைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் ஸ்விஃப்ட் ஹைப்ரிட் SG மற்றும் ஹைப்ரிட் SL மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
 
ஜப்பானில் நடைபெற்ற விழாவில் அனைவரையும் கவர்ந்த புதிய ஸ்விஃப்ட் மாடல் 91PS 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 10kW எலெக்ட்ரிக் ஜெனரேட்டர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5-ஸ்பீடு ஆட்டோமேட்டெட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
 
அதிக போக்குவரத்து நெரிசல் இருக்கும் குறுகிய சாலைகளில் தானாக இன்டெர்னல் கம்பஷன் இன்ஜின் ஆஃப் ஆகும் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. மின்சக்தி மட்டும் கொண்டு சிறிது தூரத்தை கடக்கும் வசதியை இந்த மோட்டார் வழங்குகிறது. 
 
டூ-வீல் டிரைவ் மோட் கொண்டு வெளியிடப்பட்டுள்ள புதிய மாடல் ஜப்பானிய முறையில் லிட்டருக்கு 32 கி.மீ. செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
வெளிப்புறத்தில் அதிகப்படியான மாற்றங்கள் செய்யப்படாத நிலையில், இதில் ஹைப்ரிட் பேட்ஜ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. உள்புற கேபின் புரோமினன்ட் புளூ அவுட்லைன் மற்றும் நீல நீற டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதன் SL ட்ரிம் மாடலில் பேடில் ஷிஃப்ட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. 
 
புதிய மாடல்களில் டூயல் சென்சார் பிரேக் சப்போர்ட், லேசர் மற்றும் கேமராக்களும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பாதுகாப்பு வழங்க ஏதுவாக ஆறு ஏர்பேக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. 
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.