புதுவரவு: சுசுகி லெட்ஸ் ஸ்கூட்டர்

புதுவரவு: சுசுகி லெட்ஸ் ஸ்கூட்டர்

சுசுகி மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் லெட்ஸ் ஸ்கூட்டர் டூயல்-டோன் நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது. மூன்று வித நிறங்களில் கிடைக்கும் லெட்ஸ் அனைத்து மாடல்களிலும் மேட் பிளாக் முன்பக்க அப்ரான் மற்றும் பிளாக்ட-அவுச் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளது. 
 
இதன் ஹெட்லேம்ப் கௌல் கருப்பு நிறத்தில் உள்ளது. பெயிண்டிங் மட்டுமின்றி அழகிய செக்யூர்டு கொடி ஸ்டிக்கர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய டூயல் டோன் லெட்ஸ் விலை ரூ.48,193 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
 
சுசுகி லெட்ஸ் 112.8சிசி BS-IV இன்ஜின் கொண்டு இயங்குகிறது. 8.7 bhp உடன் 9 Nm பீக் டார்க்யூ கொண்டுள்ள லெட்ஸ் மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது. சுசுகி இகோ தொழில்நுட்பம் கொண்டுள்ளதால் 63 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது. 
 
98 கிலோ எடை கொண்டுள்ள சுசுகி லெட்ஸ் முந்தைய லெட்ஸ் மாடல்களை விட அழகிய தோற்றம் கொண்டுள்ளதோடு, போட்டி வாகனங்களை விட விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.