பி.எம்.டபுள்யூ X2 கிராஸ்ஓவர்: டீசரில் வெளியாகியுள்ள தகவல்கள்

பி.எம்.டபுள்யூ X2 கிராஸ்ஓவர்: டீசரில் வெளியாகியுள்ள தகவல்கள்

கடந்த ஆண்டு நடைபெற்ற பாரிஸ் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட பி.எம்.டபுள்யூ கான்சப்ட் X2 மாடல் அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் இந்த கான்செப்ட் உருவாக்கப்பட்டு முழு பணிகளும் நிறைவடையும் தருவாயில் இருப்பது தெரியவந்துள்ளது. 
 
பி.எம்.டபுள்யூ நிறுவனம் வெளியாக இருக்கும் X2 மாடலின் சில படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளது. எனினும் சிறிய ட்விஸ்ட் சேர்த்து கார் டெஸ்டிங் செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்களை பி.எம்.டபுள்யூ வெளியிட்டுள்ளது. புதிய படங்கள் பி.எம்.டபுள்யூ தளத்தில் பதிவிடாமல் மற்றொரு தளத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. 
 
ஆங்காங்கே மூடப்பட்டு இருந்தாலும் புதிய X2 கிராஸ்ஓவர் சார்ந்த தகவல்கள் கணிக்கும் படி அமைந்துள்ளது. பெயருக்கு ஏற்றார்போல் புதிய பி.எம்.டபுள்யூ. X2 அந்நிறுவனத்தின் X1 மற்றும் X3 மாடல்களைத் தொடர்ந்து வெளியாக இருக்கிறது. கான்செப்ட் மாடலில் காணப்பட்ட பல்வேறு அம்சங்கள் புதிய X2 மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. 
 
\"\"
 
பி.எம்.டபுள்யூ X2 அசென்ட்யூட்டெட் வீல் ஆர்ச், ராப் அரவுண்டு எல்இடி டெயில் லைட் காரின் தோற்றத்தை பிரம்மாண்டமாக வெளிப்படுத்தியுள்ளது. மேலும் X-வடிவிலான எல்இடிக்களும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வழக்கமான சன்ரூஃபஅ மற்றும் பானாரோமிக் விஷன் வழங்கப்படுவது தெரியவந்துள்ளது.
 
புதிய மாடல்களிலும் UKL நுட்பம் பயன்படுத்தப்படுவதால் ஆல்-வீல் டிரைவ், பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்ற நுட்பம் மினி கூப்பர் மற்றும் கன்ட்ரிமேன் உள்ளிட்ட மாடல்களிலும் வழங்கப்பட்டுள்ளது.
 
தயாரிப்பிற்கு தயாராகியுள்ள பி.எம்.டபுள்யூ X2 செப்டம்பர் மாதம் ஃபிரான்க்ஃப்ரூட் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் இதன் விற்பனை இந்த ஆண்டு இறுதியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்தியாவில் புதிய பி.எம்.டபுள்யூ X2 வெளியாவது குறித்து இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. 
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.