பட்ஜெட் விலையில் எல்ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில அறிமுகம்

பட்ஜெட் விலையில் எல்ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில அறிமுகம்

எல்ஜி நிறுவனத்தின் புதிய K8 (2017) ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. எல்ஜி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதிய ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், மும்பையில் ஸ்மார்ட்போன் விற்பனையாளர் புதிய மாடலை ரூ.9,999 விலைக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் ஆஃப்லைன் விற்பனை குறித்து எல்ஜி சார்பில் எவ்வித தகவலும் இல்லை. 
 
கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட எல்ஜி K8 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக அமைந்துள்ள புதிய ஸ்மார்ட்போனில் சிறப்பான கேமரா, கைரேகை ஸ்கேனர், 4ஜி வோல்ட்இ மற்றும் வித்தியாதமான வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிய K8 (2017) மாடலில் கேமரா சென்சாரின் கீழ் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது.    
 
\"\"
 
எஸ்ஜி K8 (2017) சிறப்பம்சங்கள்:
 
- 5.0 இன்ச் 720x1280 பிக்சல் டிஸ்ப்ளே
- 1.25 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
- 2 ஜிபி ரேம்
- 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2 அப்ரேச்சர்
- 5 எம்பி செல்ஃபி கேமரா
- 2500 எம்ஏஎச் பேட்டரி
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
 
இந்தியாவில் கோல்டு மற்றும் ப்ளூ நிறங்களில் கிடைக்கும் எல்ஜி K8 (2017) ஸ்மார்ட்போன் டூயல் சிம் ஸ்லாட் மற்றும் ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டுள்ளது. முன்னதாக எல்ஜி நிறுவனத்தின் கியூ6 ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டது. புதிய எல்ஜி கியூ6 ஃபுல் விஷன் டிஸ்ப்ளே, மிலிட்டரி கிரேடு தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் கொண்ட புதிய ஸ்மார்ட்போன் 7000 சீரிஸ் அலுமினியம் ஃபிரேம் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.