டுகாட்டி 1299 பேனிகேல் ஆர் ஃபைனல் எடிஷன் அறிமுகம்

டுகாட்டி 1299 பேனிகேல் ஆர் ஃபைனல் எடிஷன் அறிமுகம்

இத்தாலிய மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான டுகாட்டி 1299 பேனிகேல் ஆர் ஃபைனல் எடிஷன் மாடலினை அறிமுகம் செய்துள்ளது. பெயருக்கு ஏற்றார்போல் புதிய மாடல் இதுவரை தயாரிக்கப்பட்டதில் எக்ஸ்ட்ரீம் மாடல் ஆகும்.
 
டுகாட்டியின் வழக்கமான பேனிகேல் மாடல்களை போன்றே புதிய பேனிகேல் ஆர் ஃபைனல் எடிஷனும் தலைசிறந்த வடிவமைப்பு கொண்டுள்ளது. இதில் வழக்கமான பிரத்தியேக பெயின்ட் பூசப்பட்டிருந்தாலும், இது வழக்கமான மோட்டார்சைக்கிள் கிடையாது. 
 
அத்லெடிக் பாடி கொண்டுள்ள புதிய மாடலில் 1299 சூப்பர்லெகராவில் வழங்கப்பட்டதை போன்றே 209PS இல் 11,000rpm செயல்திறன் கொண்டுள்ளது. ஃபைனல் எடிஷன் மாடலில் குறைந்த எடையில் கிரான்க்ஷிஃப்ட், பெரிய கிரான்க் பின் மற்றும் டங்ஸ்டன் பேலென்சிங் பேட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கமான பைக்களை விட இதன் எடை குறைவாக இருக்கிறது. 
 
\"\"
 
பேனிகேல் ஆர் போன்றே ஃபைனல் எடிஷனும் ஆலின்ஸ் சஸ்பென்ஷன் கொண்டுள்ளது. டுகாட்டி கோர்ஸ் வடிவமைத்த குறைந்த எடை கொண்ட ஃபிரேம் பயன்படுத்தப்பட்டுள்ளதால் இந்த மாடல் எடை மொத்தம் 190 கிலோ மட்டுமே உள்ளது. 1299 சூப்பர்லெகரா மாடலை விட இது 23 கிலோ அதிகம் ஆகும். 
 
இத்துடன் பேனிகேல் ஆர் ஃபைனல் எடிஷன் முற்றிலும் டைட்டானியம் மூலம் வடிவமைக்கப்பட்ட அக்ராபோவிக் எக்சாஸ்ட் கொண்டுள்ளது. மேலும் இனெர்ஷியல் மெஷர்மென்ட் யுனிட்டுடன் ஏ.பி.எஸ்., வீல் கண்ட்ரோல், டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் இன்ஜின் பிரேக் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
 
ரேஸ், ஸ்போர்ட் மற்றும் வெட் என மூன்று டிரைவிங் மோட்களை கொண்டுள்ளதால், இதற்கு ஏற்ற வடிவமைப்பில் ஒன்றிற்கு ஏற்றார்போல் பிரத்தியேகமாக வடிவமைத்துக் கொள்ளலாம்.
 
டுகாட்டி 1299 பேனிகேல் ஆர் ஃபைனல் எடிஷன் விநியோகம் செப்டம்பர் 2017 முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்த மாடலின் இந்திய விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.