டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் கஃபே ரேசர் இந்தியாவில் அறிமுகம்

டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் கஃபே ரேசர் இந்தியாவில் அறிமுகம்

டுகாட்டி இந்தியா நிறுவனத்தின் ஸ்கிராம்ப்ளர் கஃபே ரேசர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாடல் விலை இந்தியாவில் ரூ.9,32,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சாதாரண டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் மாடலை தழுவி வடிவமைக்கப்பட்டுள்ள புதிய கஃபே ரேசர் புதிய வடிவமைப்பு மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. 
 
ஸ்கிராம்ப்ளர் கஃபே ரேசர் மாடலில் 8.3 சிசி, எல்-ட்வின் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 73 bhp செயல்திறனை 8,250 rpm மற்றும் 67 Nm டார்கியூவினை 5,750 rpm-இல் வழங்குகிறது. ஸ்கிராம்ப்ளர் ஐகான், ஸ்கிராம்ப்ளர் கிளாசிக், ஸ்கிராம்ப்ளர் டெசர்ட் ஸ்லெட் மற்றும் ஸ்கிராம்ப்ளர் கஃபே ரேசர் என இந்தியாவில் தற்சமயம் நான்கு ஸ்கிராம்ப்ளர் மாடல்கள் விற்பனை செய்யப்படுகிறது. 
 
சாதாரண ஸ்கிராம்ப்ளர் கஃபே ரேசர் வழக்கமான டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் வடிவமைப்பை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்போர்ட்ஸ் மாடல் பைக்ககளுக்கு ஏற்றவாரு வடிவமைக்கப்பட்டுள்ள புதிய மாடலின் ஹேண்டில் பார்களில் க்ளிப், பார்-என்ட் மிரர், டெர்மிக்னானி எக்சாஸ்ட், டூயல் டெயில்பைப், கருப்பு அனோடைஸ் செய்யப்பட்ட அலுமினியம் கவர் வழங்கப்பட்டுள்ளது.   
 
\"\"
 
டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் கஃபே ரேசர் மாடலில் 17-இன்ச் அலுமினியம் வீல்ஸ் மற்றும் பைரெலி டியாப்ளோ ரோசோ II டையர்கள் மற்றும் போஷ் 9.1 எம்.பி. ABS மற்றும் பிரெஷர் சென்சார் கொண்ட பிரெம்போ பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் முன்பக்கம் ரேடியல்-டைப் ஸ்போர்ட்பைக் பிரேக்கிங் வழங்கும் முன்பக்க பிரேக் வழங்கப்பட்டுள்ளது. 
 
பல்வேறு கூடுதல் உபகரணங்களுடன் வெளிவரும் டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் மாடல் டெல்லி, மும்பை, பெங்களூரு, பூனே, ஆமதாபாத் மற்றும் கொச்சி உள்ளிட்ட பகுதிளில் உள்ள டுகாட்டி விநியோகஸ்தர்களிடம் விற்பனை செய்யப்படுகிறது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.