டி.வி.எஸ். விக்டர் பிரீமியம் எடிஷன் இந்தியாவில் வெளியானது

டி.வி.எஸ். விக்டர் பிரீமியம் எடிஷன் இந்தியாவில் வெளியானது

டி.வி.எஸ். மோட்டார் கம்பெணி நிறுவனம் இந்தியாவில் விக்டர் பிரீமியம் எடிஷன் மாடலை வெளியிட்டுள்ளது. புதிய விக்டர் பிரீமியம் எடிஷன் விலை ரூ.55,065 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

பண்டிகை காலத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள புதிய மாடலில் புதிய கிராஃபிக்ஸ் மற்றும் பாடி நிறத்தில் ஹேன்டிள் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளின் சைடு பேனல்களில் க்ரோம் வடிவமைப்பு மற்றும் இன்ஜின் கவரில் கோல்டு நிற டீடெயில் செய்யப்பட்டுள்ளது. இவை வாகனத்தின் தோற்றத்தை அழகாக்குகிறது.

இத்துடன் எல்இடி டேடைம் மின்விளக்ககுள் மற்றும் க்ரோம் கிராஷ் கார்டு வழங்கப்பட்டுள்ளது. விக்டர் பிரீமியம் எடிஷனில் 109.7cc 3-வால்வ் ஆயில் கூல்டு இன்ஜின், 9.3bhp மற்றும் 9.4Nm செயல்திறன் கொண்டுள்ளது. இத்துடன் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் லிட்டருக்கு 72 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

\"\"

பிரீமியம் எடிஷன் விக்டர் டிஸ்க் வேரியண்ட் மற்றும் கருப்பு நிறத்தில் மஞ்சள் நிற கிராபிக்ஸ் கொண்டுள்ளது. மற்ற மாடல்கள் டிஸ்க் மற்றும் டிரம் வேரியண்ட் உடன் ஐந்து நிறங்களில் கிடைக்கிறது. புதிய பிரீமியம் எடிஷன் பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு புதிய தொழில்நுட்பம் மற்றும் அசத்தல் அனுபவத்தை வழங்கும் என அந்நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார்.

புதிய பிரீமியம் எடிஷன் சாதாரண டிஸ்க் பிரேக் மாடலை விட ரூ.900 விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடலைவிட புதிய இன்ஜினில் பெரிய CV கார்புரேட்டர், உயர் ரக ஏர்-ஃபில்ட்டர் மற்றும் டியூன் செய்யப்பட்ட எக்சாஸ்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.