டி.வி.எஸ். அபாச்சி RR 310S: ஸ்பை படங்கள்

டி.வி.எஸ். அபாச்சி RR 310S: ஸ்பை படங்கள்

இந்திய மோட்டார்சைக்கிள் நிறுவனமான டி.வி.எஸ். தனது ஃபுல்லி ஃபேர்டு மோட்டார்சைக்கிளான அபாச்சி RR 310S மாடலை சோதனை செய்யும் புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சிலமுறை இந்த மாடலின் புகைப்படங்கள் வலைத்தளத்தில் கசி்ந்துள்ள நிலையில், இம்முறை காணப்பட்ட மாடல் மேட் பிளாக் நிறம் கொண்டிருக்கிறது. 

இத்துடன் முந்தைய ஸ்பை படங்களை விட புதிய புகைப்படங்களில் மோட்டார்சைக்கிள் முழுமையாக தயாரிக்கப்பட்டு, முழு வடிவமைப்பை மறைக்கும் திரை போடப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவில் புதிய அபாச்சி RR 310S மாடல் இந்த ஆண்டின் இறுதியில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. 

அந்த வகையில், புதிய அபாச்சி நவம்பர் மாத பண்டிகை காலத்தை முன்னிட்டு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அபாச்சி RR 310S மாடல் பி.எம்.டபுள்.யூ G310 R மாடலை சார்ந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய அபாச்சி RR 310S இன்ஜின், ஃபோர்க், பிரேக், ஃபிரேம் மற்றும் கண்ட்ரோல்கள் ஏற்கனவே வெளியான பி.எம்.டபுள்.யூ G310 R மாடலில் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும். டி.வி.எஸ். அபாச்சி இன்ஜின் இந்திய சாலைகளுக்கு ஏற்ப சில மாற்றங்களை கொண்டிருக்கிறது. 

\"\"

புதிய அபாச்சி RR 310S மாடலில் 310சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜின் 34bhp மற்றும் 28Nm செயல்திறன் கொண்டுள்ளது. இந்த இன்ஜினுடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. 

வடிவமைப்பை பொருத்த வரை அபாச்சி RR 310S மாடலில் டூயல் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், ஸ்ப்லிட் சீட், செங்குத்தாக பொருத்தப்பட்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், முன்பக்கம் தலைகீழான ஃபோர்க்ஸ் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷன் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் புதிய அபாச்சி மாடலில் டி.வி.எஸ். நிறுவனம் ABS வசதியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டி.வி.எஸ். நிறுவனத்தின் முதல் ஃபுல்லி ஃபேர்டு மோட்டார்சைக்கிளாக அபாச்சி RR 310S இருக்கும். முன்னதாக இதே பைக் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் பலமுறை வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் டி.வி.எஸ். அபாச்சி RR 310S மாடல் கே.டி.எம். ஆர்சி390, பென்லி 302ஆர், கவாசகி நின்ஜா 300 மற்றும் யமஹா YSF-R3 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.