டாடா டியாகோ விஸ் லிமிட்டெட் எடிஷன் வெளியீடு

டாடா டியாகோ விஸ் லிமிட்டெட் எடிஷன் வெளியீடு

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் லிமிட்டெட் எடிஷன் மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. டியாகோ விஸ் லிமிட்டெட் எடிஷன் மூலம் டியாகோ வெற்றியை கொண்டாட வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுப்பதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

டாடா டியாகோ விஸ் 1.2 லிட்டர், 3 சிலிண்டர், 85PS / 114 Nm ரெவட்ரான் பெட்ரோல் இன்ஜின் அல்லது 1.05 லிட்டர், 3 சிலிண்டர், 70PS / 140 Nm டர்போ சார்ஜ்டு ரெவோடார்க் டீசல் இன்ஜின் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.

டாடா டியாகோ விஸ் பெட்ரோல் ரூ.4.52 லட்சமும், டாடா டியாகோ விஸ் டீசல் ரூ.5.30 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய டியாகோ விஸ் லிமிட்டெட் எடிஷன் முன்னதாக வெளியான XT மாடலை சார்ந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய விஸ் மாடலின் வெளிப்புறம் முந்தைய மாடலை விட அழகாக காட்சியளிக்கிறது.

\"\"

வெளிப்புறத்தில் பெர்ரி ரெட் மற்றும் பிளாக் நிறமும், பெல்சென்ட் வைட் மற்றும் பிளாக் நிறம் கொண்ட டூயல் டோன் பெயின்ட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் டோன் வீல் கவர்களும், பிளாக் நிற ORVMஇ ரூஃப் ரெயில், பிளாக்டு-அவுட் பி-பில்லர், பெர்ரி ரெட் கிரில் ஹெட்லைட் மற்றும் பிளாக் ஸ்பாய்லர் வழங்கப்பட்டுள்ளது.

உள்புறத்தில் பெர்ரி ரெட் ஏ.சி. வென்ட் ஹெட்லைட், பியானோ பிளாக் ட்ரிம் மற்றும் புதிய ஃபேப்ரிக் சீட் வழங்கப்பட்டுள்ளது. டியாகோ விஸ் மாடலில் முந்தைய XT மாடலில் வழங்கப்பட்ட ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ப்ளூடூத் டெலிபோனி, மியூசிக் ஸ்டிரீமிங், ஸ்மார்ட்போன் நேவிகேஷன் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், டிஸ்ப்ளே உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.