சோதனையில் சிக்கிய சக்திவாயந்த டி.வி.எஸ். அபாச்சி RR 310

சோதனையில் சிக்கிய சக்திவாயந்த டி.வி.எஸ். அபாச்சி RR 310

டி.வி.எஸ். நிறுவனத்தின் புதிய அபாச்சி RR 310 செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்க்கப்படும் வெளியீடு நெருங்கி வரும் நிலையில், புதிய அபாச்சி RR 310 சோதனை வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. 
 
அதன்படி, தற்சமயம் வெளியாகியுள்ள புகைப்படம் பெட்ரோல் பன்க் ஒன்றில் எடுக்கப்பட்டுள்ளது. அபாச்சி RR 310 பெட்ரோல் நிரப்பும் போதும், அங்கிருந்து கிளம்பும் போதும் படமாக்கப்பட்டுள்ள நிலையில், அபாச்சி மட்டுமின்றி பி.எம்.டபுள்யூ. மற்றும் பென்ட்லி பைக்களும் அருகில் நின்று கொண்டிருந்தன. 
 
\"\"
 
புதிய புகைப்படங்களின் தொகுப்பு அபாச்சி RR 310, பி.எம்.டபுள்யூ மற்றும் பென்ட்லி பைக்களுடன் சோதனை செய்வதாக அமைந்துள்ளது. ஏற்கனவே வெளியான புகைப்படங்களில் டி.வி.எஸ். அபாச்சி RR 310 மாடலை போட்டி நிறுவனங்களை விட தரமுள்ளதாக வழங்குவதில் அதிக கவனம் செலுத்தி வருவது தெரியவந்துள்ளது.  
 
டி.வி.எஸ். அபாச்சி RR 310 மாடலில் பி.எம்.டபுள்யூ G 310 R இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதில் 313 சிசி சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் 34 bhp மற்றும் 28 Nm செயல்திறன் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 6-ஸ்பீடு கிர்பாக்ஸ் மற்றும் ABS ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இந்தியாவில் பி.எம்.டபுள்யூ G 310 R அடுத்த ஆண்டு வெளியாகும் என கூறப்படுகிறது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.