கூடுதல் மெமரி கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம்

கூடுதல் மெமரி கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம்

சியோமி நிறுவனத்தின் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனான ரெட்மி 4A இந்தியாவில் மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. இந்தியாவில் ரூ.5,999 விலையில் விற்பனை செய்யப்படும் ரெட்மி 4A மாடலின் 32 ஜிபி மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக ரெட்மி 4A மாடல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவில் வெளியிடப்பட்டது. 
 
இம்முறை வெளியிடப்பட்ட 32 ஜிபி மாடலில் 3 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை இந்தியாவில் ரூ.6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய 32 ஜிபி மாடல் விற்பனை சியோமி அதிகாரப்பூர்வ வலைத்தளம், ப்ளிப்கார்ட், அமேசான் இந்தியா, பேடிஎம், டாடா கிளிக் போன்ற வலைத்தளங்களில் ஆகஸ்டு 31-ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது. 
 
 
\"\"
 
சியோமி ரெட்மி 4A சிறப்பம்சங்கள்:
 
 
- 5.0 இன்ச் எச்டி 720x1280 பிக்சல் டிஸ்ப்ளே
- 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட்
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
- 5 எம்பி செல்ஃபி கேமரா
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3120 எம்ஏஎச் பேட்டரி
- ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ
 

 

சியோமி ஏற்கனவே வெளியிட்ட ரெட்மி 4A ஸ்மார்ட்போனில் 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டெர்னல் மெமரி மட்டுமே வழங்கப்பட்டது. குறைந்த ரேம் கொண்ட மாடல் ஏற்கனவே அதிகம் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் புதிய 3 ஜிபி ரேம் கொண்ட மாடலும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.