இந்திய சுதந்திரத்தை பறைசாற்றும் மூன்று டூவீலர்கள்

இந்திய சுதந்திரத்தை பறைசாற்றும் மூன்று டூவீலர்கள்

சர்வதேச இருசக்கர வாகனங்கள் சந்தையில் மிக வேகமாக வளர்ந்து வரும் சந்தையாக இந்தியா இருக்கிறது. எனினும், இந்தியாவில் ஒருகாலத்தில் இருசக்கர வாகனங்கள் மிகப்பெரிய ஆடம்பர பொருளாக பார்க்கப்பட்டது. அந்த காலத்தில் மோட்டார் சைக்கிள்களின் விலை அதிகமாக இருந்தது. இதனால் இருசக்கர வாகனங்கள் குறைந்த எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டன. 
 
ஃபோக்ஸ்வேகன் பீட்டிள் மற்றும் மாருதி சுசுகி 800 மாடல்களை போன்று இருசக்கர வாகனங்களிலும் சில மாடல்கள் அனைவருக்கும் ஏற்றதாய் வடிவமைக்கப்பட்டன. இவை அனைவரும் வாங்கும் படி விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஆட்டோமொபைல் சந்தையில் பெருமளவு மாற்றங்களை செய்ய தூண்டியது.  
 
இவ்வாறு இந்திய சந்தையில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய மூன்று இருசக்கர வாகனங்களை தொடர்ந்து பார்ப்போம். 
 
கைனடிக் லூனா:
 
\"\"
 
உலகின் விலை உயர்ந்த மோட்டார்சைக்கிள்களை உருவாக்கி வரும் கைனடிக் நிறுவனம் 1972-ம் ஆண்டு முற்றிலும் எதிர்மறையான நோக்கம் கொண்டிருந்தது. கைனடிக் லூனா 50சிசி 1972-ம் ஆண்டில் நாட்டிலேயே அனைவரும் வாங்கும் விலை குறைந்த இருசக்கர வாகனமாக அமைந்தது.
 
அந்று பெட்ரோல் தங்கம் மற்றும் வெள்ளிக்கு நிகரான மதிப்பு கொண்டிருந்த நிலையில், லூனா சைக்கிள் போன்ற பெடல் பொருத்தப்பட்டிருந்தது. இதனால் எரிபொருள் இருப்பதற்கு ஏற்றவாரு பெடலையும் பயன்படுத்தலாம். இந்தியாவில் மொபேட் விற்பனை செய்யும் ஒரே நிறுவனமாக இருக்கும் டி.வி.எஸ். நிறுவனம் மாதம் 70,000க்கும் அதிகமான மொபெட்களை விற்பனை செய்து வருகிறது.  
 
பஜாஜ் செடாக்:
 
\"\"
 
1972-ம் ஆண்டிலேயே பஜாஜ் நிறுவனம் செடாக் மாடல் ஸ்கூட்டரை இந்தியாவில் வெளியிட்டது. இத்தாலியை சேர்ந்த வெஸ்பா ஸ்ப்ரின்ட் போன்று செட்டாக் மாடலும் அனைவரும் வாங்கக்கூடிய மாடலாக அமைந்தது. ஹமாரா பஜாஜ் என்ற வாசகத்துடன் அறிமுகமான செட்டாக் அந்த காலத்து ஸ்கூட்டர்களுக்கு எதிரான மாடலாக அமைந்தது. 
 
யெஸ்டி, புல்லட் மற்றும் ஜவாஸ் போன்ற மாடல்களின் ஆதிக்கம் நிறைந்திருந்த காலக்கட்டத்தில் செட்டாக் நடுதச்தர வர்கத்திற்கு ஏற்ற இருசக்கர வாகனமாக அமைந்தது. அந்த சமயத்தில் செடாக் மாடலை வாங்க சில வருடங்கள் வரை காத்திருக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. 
 
ஹீரோ ஹோன்டா சிடி100:
 
\"\" 
 
நாட்டிலேயே ஸ்ப்லென்டர் அதிக பிரபலமான மாடலாக இன்று இருந்தாலும், ஸ்ப்லென்டர் மாடலுக்கு அந்த காலத்திலேயே ஹீரோ ஹோன்டா சிடி100 அடித்தளமாக அமைந்தது. மற்ற இருசக்கர வாகன நிறுவனங்கள் டூ-ஸ்ட்ரோக் வாகனங்களை தயாரித்த நிலையில் ஹீரோ ஹோன்டா 4-ஸ்ட்ரோக் வாகனமான சிடி100 மாடலை 1984-ம் ஆண்டு வெளியிட்டது. 
 
மற்ற நிறுவன பைக் மாடல்கள் அட்டகாச ஸ்டைல் மற்றும் வடிவமைப்பு கொண்டிருந்தாலும் ஹீரோ ஹோன்டா சிடி100 மாடலுடன் போட்டியிட முடியாமல் போனது. ஹீரோ ஹோன்டா சிடி100 பெரும்பாலானோரை கவர்ந்த மாடலாக அமைந்தது. இதைத் தொடர்ந்து 1994-ம் ஆண்டு ஸ்ப்லென்டர் மாடல்கள் வெளியிடப்பட்டது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.