இந்தியாவில் ரெனால்ட் க்விட் 02 அண்டுவிழா எடிஷன் அறிமுகம்

இந்தியாவில் ரெனால்ட் க்விட் 02 அண்டுவிழா எடிஷன் அறிமுகம்

ரெனால்ட் க்விட் 02 ஆண்டுவிழா எடிஷன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரெனால்ட் க்விட் 02 ஆண்டுவிழா எடிஷன் விலை ரூ.3.43 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) முதல் துவங்குகிறது.
 
புதிய ரெனால்ட் க்விட் 02 ஆண்டுவிழா எடிஷன் 0.8 மற்றும் 1.0 லிட்டர் இன்ஜின்களை கொண்டுள்ளது. இவை முறையே 53bhp மற்றும் 67bhp செயல்திறன் கொண்டுள்ளது. புதிய மாடலில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. நான்கு மாடல்களில் கிடைக்கும் க்விட் டாப் என்ட் மாடலின் விலை ரூ.3,97,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
 
புதிய க்விட் 02 ஆண்டுவிழா எடிஷன் RXL மற்றும் RXT ரெனால்ட் க்விட் ஹேட்ச்பேக் மாடல்களை தழுவி வடிவமைக்கப்பட்டுள்ளது. எனினும் புதிய மாடலின் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதிய மாற்றங்கள் காரை முந்தைய மாடல்களிடம் இருந்து வித்தியாசப்படுத்துகிறது. 
 
\"\"
 
சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான வெளிப்புற பெயின்ட் மற்றும் ரூஃப் மற்றும் சி-பில்லர்களில் கான்ட்ராஸ்ட் கிராஃபிக்ஸ் காரின் வெளிப்புற தோற்றத்தை மேலும் அழகாக்குகின்றன. இத்துடன் பக்கவாட்டுகளில் 02 கிராஃபிக்ஸ், முன்புறம் மற்றும் பின்பக்கம் ஸ்கிட் பிளேட் மற்றும் டூயல் டோன் ORVMகள் இடம்பெற்றுள்ளன. 
 
காரின் இன்டீரியர் முழுக்க கருப்பு மற்றும் சிவப்பு நிறம் கொண்டிருப்பதோடு, ஆங்காங்கே 02 சின்னம் காணப்படுகிறது. இத்துடன் புதிய ஸ்டீரிங் வீல், டூயல்டோன் கியர் நாப், கால்மிதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் க்விட் மாடல்களின் இரண்டாம் ஆண்டு வெற்றியை கொண்டாடும் வகையில், புதிய ஆண்டுவிழா எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
வழக்கமான க்விட் மாடல்களை விட புதிய ஆண்டுவிழா எடிஷன் வாங்க வாடிக்கையாளர்கள் ரூ.10,000 கூடுதலாக செலுத்த வேண்டும் என்பதால் புதிய எடிஷன் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.