இந்தியாவில் கேலக்ஸி நோட் 8 முன்பதிவு துவங்கியது

இந்தியாவில் கேலக்ஸி நோட் 8 முன்பதிவு துவங்கியது

சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனினை இந்திய வாடிக்கையாளர்கள் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் முன்பதிவு செய்ய முடியும். சாம்சங் இந்தியா வலைதளத்தில் புதிய நோட் ஸ்மார்ட்போனினை வாங்க விரும்புவோர் முன்பதிவு செய்ய வேண்டும், இதன் பின் விற்பனை சார்ந்த தகவல்கள் அவர்களுக்கு அனுப்பப்படும். 
 
புதிய நோட் ஸ்மார்ட்போனினை முன்பதிவு செய்யும் போது பெயர், மின்னஞ்சல், மொபைல் நம்பர், தபால் எண் உள்ளிட்ட தகவல்களுடன் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்பார்க்கும் அம்சத்தை குறிப்பிட வேண்டும். 
 
தலைசிறந்த கேமரா, அழகிய தோற்றம், சிறப்பான வடிவமைப்பு, மேம்படுத்தப்பட்ட பேட்டரி பேக்கப், வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட், கேமிங் அனுபவம், மேம்படுத்தப்பட்ட விர்ச்சுவல் ரியாலி்ட்டி  போன்ற ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இதில் ஒன்றை தேர்வு செய்து, சாம்சங் தனியுரிமை கொள்கைகளை உறுதி செய்ய வேண்டும். இறுதியாக ரெஜிஸ்டர் செய்யக் கோரும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.   
 
\"\"
 
இந்தியாவில் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாத இறுதியில் தீபாவளி பண்டிகை சமயத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 24-ம் தேதி வாக்கில் டெல்லியில் விநியோகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.   
 
அகஸ்டு 23-ம் தேதி நியூ யார்க் நகரில் நடைபெற்ற விழாவில் சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் சூப்பர் குவாட் எச்டி+ சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே மற்றும் டூயல் பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் தென் கொரியாவில் சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் விற்பனை செப்டம்பர் 15-ம் தேதி துவங்குகிறது. இதன் விலை 930 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.59,561 துவங்குகிறது.
 
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனின் 64 ஜிபி மாடலின் விலை ரூ.65,000 முதல் துவங்கும். முதற்கட்டமாக 64 ஜிபி மட்டும் விற்பனைக்கு வரும் என்றும் 1128 ஜிபி மற்றும் 256 ஜிபி மாடல்கள் விற்பனை தாமதமாக துவங்கும் என்றும் கூறப்படுகிறது.
 
 
\"\"
 
சாம்சங் கேலக்ஸி நோட் 8 சிறப்பம்சங்கள்:
 
 
- 6.3 இன்ச் குவாட் எச்டி+AMOLED டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்
- சாம்சங் எக்சைனோஸ் ஆக்டா கோர் சிப்செட் (சில சந்தைகளில் மட்டும்)
- 6 ஜிபி ரேம்
- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ப்ளூடூத் 5.0, எல்டிஇ
- 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா அமைப்பு
- 8 எம்பி செல்ஃபி கேமரா
- 3300 எம்ஏஎச் பேட்டரி
- ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்
 

 

புதிய கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் IP68 சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் டூயல் பிரைமரி கேமரா அமைப்பு ஐபோன் 7 பிளஸ் கேமராவிற்கு போட்டியாக இருக்கிறது. இத்துடன் எஸ்-பென், ஆல்வேஸ்-ஆன் டிஸ்ப்ளே, லைவ் மெசேஜஸ் போன்ற ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.